திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவொளி ஆனந்தன் அவர்கள் இவர் மனைவி அமுதா பூங்கொடி, மகன் ஹரிஹரன், மகள் கிருத்திகா ஹரிணி, தாய் பானுமதி எல்லப்ப கவுண்டர் ஆகியோர் உள்ளனர். அறிவாளி ஆனந்தன்அவர்கள் பள்ளிப்படிப்பு வீராங்குப்பம் நிதியுதவி நடுநிலைப்பள்ளி, உயர்நிலைக் கல்வி கரும்பூர் இந்து மேல்நிலைப் பள்ளி, 1989-90 ல் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழிற்படிப்பு பயின்றுள்ளார். தற்போது ஆம்பூரில் ஆனந்தா தொழிற்பயிற்சி கல்லூரி நடத்திவருகிறார்.
அறிவொளி ஆனந்தன் அவர்கள் சேவை சில குறிப்பு: 1991ல் மத்திய மாநில அரசாங்கம் நடத்திய அறிவொளி இயக்கத்தில் வீராங்குப்பத்தில் ஆனந்தன் தன்னார்வலராக சேர்ந்து கல்விப் பணியில் பல்வேறு சேவைகள் செய்து வந்ததால் அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் ராமசுந்தரம் அவர்களிடம் அறிவொளி ஆனந்தன் என்ற பெயர் சூட்டி இளம் வயதிலேயே வாழ்த்து பெற்றவர்.
கிராம அறிவியல் விழிப்புணர்வு இயக்கம் (விசை NGO) என்ற தொண்டு நிறுவனம் ஆரம்பித்து இதில் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு எளிமையாக புரியும் வகையில் பல்வேறு விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்.
இதில் 1999 டிசம்பர் மாதம் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை சைக்கிள் பிரசாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கல்வித்துறையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த பள்ளி அளவில் முதல் மூன்று நிலைகள் வரும் மாணவர்களை பாராட்டி விசை விருது வழங்கி உற்சாகம் ஊக்கப்படுத்துதல், ஏழை மாணவர்களை படிக்க வைத்தல் வருடத்திற்கு நூறு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து விசை நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறார்.
புகை போதைப் பொருள் பழக்கம் இல்லாமல் குறைந்தது 10 ஆண்டுகள் விபத்தே செய்யாமல் ஓட்டி வரும் பேருந்து ஓட்டுனர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஸ்ரீ பார்த்தசாரதி விசை விருது வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறார்.
மேலும் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்களுக்கு விசை விருது வழங்கப்படுகிறது. குறைந்தது ஐந்து முறைக்கு மேல் ரத்த தானம் செய்யும் நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் சேவையை பாராட்டி ஊக்கப்படுத்த விசை இயக்கம் சார்பில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக பல்வேறு விருதுகள் வழங்கி உற்சாகப்படுத்தி மன மகிழ்ச்சி ஏற்படுத்தி வருகிறார். டாக்டர் அறிவொளி ஆனந்தன்.
விசை தொண்டு நிறுவனம் மூலம் கல்விப் பணிகள், இயற்கை வளங்களை பாதுகாத்தல், மரங்களை வளர்த்தல், இயற்கை விவசாயத்தை போற்றுதல், சுகாதார நல வாழ்வு, பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு, புகை - போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு, ஆன்மீக சேவை பணி என பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவர் 28 முறை ரத்த தானம் செய்துள்ளார்
2 ஆண்டு கொரோனா காலத்தில் விசை தொண்டு நிறுவனம் மூலம் ஆனந்தா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் திருமிகு சிவனருள் தலைமையில் மூலமாக கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஆம்பூர் நகரம் மற்றும் பல்வேறு கிராமங்கள் / பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்தார். வாணியம்பாடி RDO காயத்ரி சுப்பிரமணி மூலம் இலவச மாஸ்க் வழங்குதல், கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் போட்டுக்கொள்ள வேண்டி சுகாதார பணிகளில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்துள்ளார்.
இதனை கண்காணித்த நீயு ஜெருசலம் பல்கலைக்கழகம் தாமாக முன்வந்து அறிவொளி ஆனந்தன் அவர்கள் சேவையை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்க கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேலூரில் நடந்த விழாவில் அறிவொளி ஆனந்தன் அவர்களுக்கு டாக்டர் பட்டம், விருது வழங்கி பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். டாக்டர் அறிவொளி ஆனந்தன் அவர்களின் சேவை மென்மேலும் வளர எங்கள் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:
Post a Comment