அறிவொளி. ஆனந்தன், நிறுவனர் கிராம அறிவியல் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் குழுவினர் வீராங்குப்பம், ஆம்பூர்-635802. வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. செல்: 7010030556, 9442310637, 04174-242481
Saturday, 20 August 2022
Saturday, 13 August 2022
ஆம்பூரில் 75 ஆவது சுதந்திர விழா முன்னிட்டு வீடு தோறும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாட வேண்டி விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது.
ஆம்பூரில் 75 ஆவது சுதந்திர விழா முன்னிட்டு வீடு தோறும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாட வேண்டி விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் ஆனந்தா தொழிற்பயிற்சி & பாரா மெடிக்கல் கல்லூரி மற்றும் விசை தொண்டு நிறுவனம் இணைந்து நமது இந்திய அரசு 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடு தோறும் தேசியக்கொடி ஏற்றி தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டி மத்திய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து ஆம்பூரில் உள்ள எவிடிசி தொழிற்பயிற்சி பாராமெடிக்கல் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் அறிவொளி ஆனந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆம்பூர் பைபாஸ் விநாயகர் கோவில் அருகில் துவங்கி ராஜீவ் காந்தி சிலை, பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை பஜார் வழியாக, நாகேஸ்வரன் கோயில், எஸ் கே ரோடு, சாய்பாபா கோவில், பி எம் எஸ் கொள்ளை தெரு என ஆம்பூர் முக்கிய வீதிகளில் மாணவர்கள் தேசியக்கொடி ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விசைத்தொண்டு நிறுவன தலைவர் அறிவொளி ஆனந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்கள் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து, ஆம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் திரு சரவணன் அவர்கள் தேசியக்கொடி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். வாழ்த்துரையாளர்கள், ஆம்பூர் அரசு மருத்துவர் டாக்டர் பிரியா, ஆம்பூர் நகர காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகம். விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை செயலாளர் லைன் ஜி ஓம் சக்தி பாபு மற்றும் தேமுதிக மாதனூர் மத்திய ஒன்றிய செயலாளர் துத்திப்பட்டு ஜான்சன், பிஜேபி வர்த்தக அணி மாவட்ட பொறுப்பாளர் ஆனந்தன் பிஜேபி கட்சியின் ஆம்பூர் நகர மகளிர் அணி தலைவர் கவிதா சீனிவாசன் இந்து மக்கள் கட்சி மாணவரணி செயலாளர் கோபி. உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சுதந்திர தின விழா வாழ்த்து கூறினார்கள்.
தேசியக்கொடி விழிப்புணர்வு ஊர்வலம் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை கடத்து நிறைவு விழா ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. ஆம்பூர் அரசு மருத்துவ அலுவலர் (பொறுப்பு) டாக்டர் பிரியா அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள் மாணவர்களுக்கு திருப்பத்தூர் சுகாதார நல இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு குளிர்பானம் வழங்கி ஊர்வலத்தை நிறைவு செய்தார். பிறகு சுதந்திர தின விழா வாழ்த்துரையாக இன்றைய மாணவர்கள் வீடு மற்றும் நாட்டின் பொறுப்புணர்ந்து தொழில் பக்தியோடு சேர்ந்து தேசபக்தி மிகுந்த மாணவர்களாக திகழ வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஆனந்தா தொழிற்பயிற்சி கல்லூரி ஆசிரியர்கள் தாரணி காவியா முனிராஜ், ரீனா பிரசன்னகுமார், கலையரசி வடிவேல், நளினி ரவிக்குமார், மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக AVTC முதல்வர் தாரணி காவியா அனைவருக்கும் நன்றி கூறினார்.





















