Saturday, 4 December 2021

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சீர்மிகு கல்விப்பணி திட்டம் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு

 
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சீர்மிகு கல்விப்பணி திட்டம் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு 

4 /12 / 2021 சனிக்கிழமை தேவலாபுரம் பள்ளியில் கலைக் குழுவினருடன் சேர்ந்து விசை இயக்கத்தின் சார்பாக நமது அறிவொளி ஆனந்தன் அவர்கள் துண்டுப்பிரசுரங்களை அளித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் , பள்ளியின் தலைமையாசிரியர் , ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

   
ஆனந்தா பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எடுத்த படம்.

Tuesday, 30 November 2021

இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி


இல்லம் தேடி  கல்வி விழிப்புணர்வு                                   நிகழ்ச்சி

 



பள்ளிக்கல்வித்துறை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சீர்மிகு கல்விப்பணி திட்டம் "இல்லம் தேடி  கல்வி" விழிப்புணர்வு நிகழ்ச்சி சின்னவரிக்கம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்எல்ஏ வில்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைக்குழு ஆடல், பாடல் மற்றும் நாடகம் வாயிலாக குழந்தைகளுக்கு இல்லம் தேடி கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியின்போது விசை இயக்கத்தின் சார்பாக நமது அறிவொளி ஆனந்தன் அவர்கள் துண்டுப்பிரசுரங்களை எம்எல்ஏ வில்வநாதன் அவர்கள் வாயிலாக மக்களுக்கு அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


குழந்தைகளோடு குழந்தையாக நமது விசை இயக்கத்தின் தலைவர் அறிவொளி ஆனந்தன் அவர்கள்