கிராம அறிவியல் விழிப்புணர்வு இயக்கம் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு தன்னார்வ சேவைப்பணிகளை செய்து வருகிறது.
இதில் தாய் தமிழ் மொழியை போற்றுதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல், மரங்களை வளர்த்தல், இயற்கை விவசாயத்தை ஆதரித்தல், சுகாதாரம், நல வாழ்வு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிளாஷ்டிக் பொருட்கள், புகை-போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு, மூடநம்பிக்கைகளைக களைந்து அறிவியல் உண்மைகளை உணர்த்துதல்.
மாணவர்களின் கல்வித்திறன்களை ஊக்கப்படுத்தும் வகையில் 10, 12 வகுப்புகளில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும, 100% வெற்றிப்பெறச் செய்த ஆசிரியர்களுக்கும் பாராட்டி விசை விருது ஒவ்வொரு ஜுன் மாதத்தில் வழங்கி வருகிறது.
ஆசிரியர்களுக்கான விசை நல்லாசிரியர் விருது, ரத்ததானம், கண்தானம், உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களுக்கு விசை விருது, தனித்திறன் கொண்டவர்களை சாதனையாளர்களாக்க ஊக்கப்படுத்துதல், துறைசார்ந்த சாதனையாளர்களைப் பாராட்டி மகிழ்விப்பது என வருடத்திற்கு 3-வகையான விசை விருது வழங்கி நல்லது செய்பவர்களையும் நல்லவைகளையும் பாராட்டி ஊக்கப்படுத்தி மகிழ்விப்பது நம்முடைய விசை இயக்கத்தின் ஒரு நோக்கமாகும்.


hai supper mam
ReplyDelete